ETV Bharat / state

குப்பைக் கிடங்காக மாறிய ஏற்காடு வட்டார வள சேவை மைய கட்டடம் : மக்கள் கவலை !

சேலம் : போதிய பராமரிப்பு இல்லாததால் குப்பை கிடங்காக மாறியிருக்கும் ஏற்காடு வட்டார வள சேவை மைய கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

பராமறிப்பு இல்லாததால் குப்பை கிடங்காக மாறியது ஏற்காடு வட்டார வள சேவை அலுவலகம்
author img

By

Published : Aug 29, 2019, 8:03 PM IST

Updated : Aug 30, 2019, 9:26 AM IST

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் ரூபாய் 40 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட வட்டார வள சேவை மையம் தற்பொழுது குப்பை கிடங்காகவும், மாட்டு தொழுவமாகவும் மாறியுள்ளது என ஏற்காடு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்காடு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயற்பட்டுவருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

பராமறிப்பு இல்லாததால்குப்பை கிடங்காக மாறியது ஏற்காடு வட்டார வள சேவை அலுவலகம்

இந்நிலையில் ஏற்காட்டில் இருக்கும் குப்பைகள் அனைத்தும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக சேவை மைய கட்டடம் அருகே மலைபோல் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த அலுவலகம் எந்த செயற்பாடுமின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால்தான் இந்த நிலை வந்துள்ளதாக ஏற்காடுவாசிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:ஏற்காட்டில் பல லட்சம் ரூபாய் செலவில் அரசால் கட்டப்பட்ட புதிய வட்டார வள சேவை மைய கட்டடம் குப்பைக் கிடங்காகவும் மாட்டுத்தொழுவமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்று ஏற்காடு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Body:ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2013 - 14 ஆம் நிதியாண்டில் வட்டார சேவை மைய கட்டடம் புதியதாக கட்டப்பட்டது. இதை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வட்டார சேவை மைய கட்டடம் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டடம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டும் , மாட்டுத் தொழுவமாகவும் மாற்றப்பட்டு அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஏற்காடு பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்காடு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஏற்காட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சேவை மைய கட்டடம் அருகே மட்டுமே மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குப்பைக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம், இயற்கை அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து 24 மணி நேரமும் மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் வீசுவதால் என்ற பகுதியைக் கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்காடு பகுதி வாசி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறுகையில்," பல லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு செலவு செய்து வட்டார சேவை மைய கட்டிடம் கட்டியது தற்போது மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. அதோடு மட்டுமல்லாது கட்டடத்தின் பின்புறமும் அருகிலும், குப்பை கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்களின் வரிப்பணம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வீணடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஏற்காடு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வட்டார சேவை மைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல டன் கணக்கில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை முறையாக சேகரித்து ஒரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறோம் " என தெரிவித்தார்.

Conclusion:மக்களின் புகார் குறித்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு விசாரிக்கையில்," இன்னும் சில நாட்களில் வட்டார வள சேவை மையத்தை புதுப்பித்து அங்கே ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சேவை மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு சவாலாக விளங்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Last Updated : Aug 30, 2019, 9:26 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.