சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்து, வேன், கார்களில் வந்து செல்கிறார்கள். இவர்களில் பலர் நெகிழிப் பைகள், தண்ணீர் பாட்டில்களை மலைப்பாதையில் வீசி செல்கிறார்கள்.
இந்த நெகிழிப் பைகள், குடிநீர் பாட்டில்கள் ஏற்காடு மலையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி குரங்குகளுக்கு பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதை அடுத்து ஏற்காடு மலைப்பாதையில் நெகிழிப் பைகள், குடிநீர் பாட்டில்கள் அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.
சேலம் மாவட்ட வனத் துறை, சேலம் திரிவேணி நிறுவனமும், சேலம் இயற்கை கழகமும் இணைந்து இந்தத் தூய்மை செய்யும் பணியை நடத்தினர். இதில் வனத் துறையில் பணியாற்றிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், ஊழியர்கள், திருவேணி நிறுவன ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தத் தூய்மைப் பணியை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின காப்பாளர் யுவராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, திருவேணி நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
இதையும் படிக்க: நெகிழிக்கு எதிராகக் களம்கண்டுள்ள இளம் பிகார் போராளிகள்!