உலக செவித்திறன் விழிப்புணர்வு வாரமானது ஆண்டுதோறும் மார்ச் 3 முதல் 9ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் செவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
மேலும், பேரணியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் செவித்திறன் குறைபாடு, கன்னத்தில் அறைய கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது