உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி சேலம் காந்தி சாலை பகுதியில் நடைபெற்றது. இந்தப் பேரணியை சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
காந்தி சாலையில் தொடங்கிய பேரணி அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழியாகச் சென்று தனியார் கல்லூரியில் நிறைவடைந்தது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும், பெண்களின் திருமண வயது குறித்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.
மேலும், அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: இயற்கை மருத்துவத்தின் அவசியம் முக்கியம் - கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி