சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் படித்து முடித்து அதேபகுதியில் செவிலியராகப் பணி புரிந்து வருகிறார்.
அவர் பணிபுரியும் இடத்தில் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அவர்களின் இந்த சந்திப்பை இளம்பெண்ணின் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி சுரேகாவை ஐந்து பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .
அந்த ஐந்து பேர் கும்பலில் இளம்பெண் படித்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 5 பேர் கும்பல் தொடர்ச்சியான மிரட்டலுக்கு பயந்து போன இளம்பெண் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர் .அங்கு அவரின் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு
தொடர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து இளைஞர்களையும் காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.