ETV Bharat / state

பாலியல் தொல்லை: மாமனார் மீது பெண் புகார் - குற்றச் செய்திகள்

சேலத்தில் பாலியல் தொல்லை தரும் மாமனார், அதற்கு உடந்தையாக இருக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
author img

By

Published : Jul 26, 2021, 7:18 PM IST

Updated : Jul 26, 2021, 7:38 PM IST

சேலம்: சேலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கும், 26 வயது இளம்பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது கணவரின் தந்தை பிச்சைமுத்து, பாலியல் தொல்லை கொடுப்பதாக, சந்திரசேகரனின் மனைவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) புகாரளித்தார்.

மாமனாரின் செயலுக்கு கணவரும் உறுதுணையாக இருப்பதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கணவர், மாமனார் மீது நடவடிக்கை எடுக்க புகார்

மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால், ரூ. 2 லட்சம் பணம், இரண்டு பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கணவர், மாமனார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இளம்பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Last Updated : Jul 26, 2021, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.