ETV Bharat / state

சேலத்தில் 1169 வாக்கு மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு - physically challenged and elder voters

சேலம்: வாக்கு மையங்களில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் 1169 வாக்கு மையங்களுக்கு சக்கர நாற்காலி அனுப்பிவைப்பு
author img

By

Published : Apr 13, 2019, 10:43 PM IST

இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு மையங்களுக்கு 1169 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அதன் பின் மாவட்ட ஆட்சியர் ரோகினி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,

"வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் நூறு விழுக்காடு வாக்களிக்கும் தேர்தலாக இருக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ,சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்கு மையங்களுக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த வாக்கு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி எளிதாக வாக்குமையத்தில் வந்து வாக்களித்து செல்ல முடியும். மேலும் சேலம் மாவட்டத்தில் அமைதியாக தேர்தல் நடக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 1169 வாக்கு மையங்களுக்கு சக்கர நாற்காலி அனுப்பிவைப்பு

.

Intro:சேலம் மாவட்டத்தில் உள்ள1169 வாக்கு மைய வளாகங்களில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Body:மாற்றுத்திறனாளிகள் மட்டும் முதியோர்களுக்காக 1169 சக்கர நாற்காலிகள் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சக்கர நாற்காலிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டி வாக்கு மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ரோகிணி அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் ,"வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 100% வாக்களிக்கும் தேர்தலாக இருக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்கு மையங்களுக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த வாக்கு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் முதியோர்கள் ஒரு சிரமமும் இன்றி எளிதாக வாக்குமையத்தில் வந்து வாக்களித்து செல்ல முடியும் . சேலம் மாவட்டத்தில் அமைதியாக தேர்தல் நடக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக மாவட்டம் முழுவதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சமூகவிரோதிகள் கணக்கெடுக்கப்பட்டு 319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் எந்த ஒரு அச்சமுமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

மேலும் தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார்களைத் இருப்பின் பொதுமக்கள் அதற்கான வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண் மற்றும் சி விஜில் செயலி மூலம் எங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் .

புகார் தரப் பட்ட 100 நிமிடங்களுக்குள் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.