ETV Bharat / state

குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர்! - damage

சேலம்: குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடுவதால், குழாயை சரிசெய்ய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஒடும் அவலம்
author img

By

Published : Jun 28, 2019, 10:45 AM IST

Updated : Jun 28, 2019, 11:14 AM IST

சேலம் சாரதா கல்லூரி அருகே குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சேலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனை உடனே சரிசெய்யுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஒடும் அவலம்

சேலம் சாரதா கல்லூரி அருகே குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சேலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனை உடனே சரிசெய்யுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஒடும் அவலம்
Intro:குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்.

Body:சேலம் சாரதா கல்லூரி அருகே குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் வீணாக சாக்கடையில் கலப்பதால் பொதுமக்கள் அதிருப்தி.

வரட்சி காரணமாக தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது தலைவிரித்தாடுகிறது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலைகளிலும் சாக்கடைகளிலும் ஓடுகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களிலேயே பல்வேறு பகுதிகளில் மேட்டூரிலிருந்து மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய கூடிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. மேலும் இன்று சேலம் சாரதா கல்லூரி சாலையில் மேட்டூரில் இருந்து அஸ்தம்பட்டியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு காலை 5 மணி முதல் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி சாக்கடையில் கலந்தது. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடை நீர் கலப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை தகவல் அளித்தும் சுமார் நான்கு மணி நேரமாக அதிகாரிகள் யாரும் வராததால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது.

சேலத்தில் அடுத்தடுத்து குடிநீர் குழாய்கள் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைத்து பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Conclusion:
Last Updated : Jun 28, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.