ETV Bharat / state

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு ஒரேநாளில் 2 முறை குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரேநாளில் இரண்டு முறை குறைக்கப்பட்டுள்ளது.

mettur dam
மேட்டூர் அணை
author img

By

Published : Sep 30, 2020, 7:14 PM IST

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து, கடந்த சில நாள்களாக விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்துவருகிறது.

கடந்த 25ஆம் தேதி மதியம் அணையின் நீர் இருப்பு 100 அடியை எட்டியது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் பெய்துவந்த மழையின் அளவு கடந்த இரண்டு நாள்களாக குறைந்ததால் அங்குள்ள அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் பெருமளவில் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாகக் குறைந்து கொண்டேவருகிறது.

கடந்த 24ஆம் தேதி காலை அணைக்கு விநாடிக்கு 49 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, 25ஆம் தேதி 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதையடுத்து நீர்வரத்து மேலும் குறைந்து ஐந்தாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதனால், அணையிலிருந்து டெல்டா, கால்வாய் பாசனத்துக்காக செப். 29ஆம் தேதி காலை 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் மதியம் 3 மணிக்கு நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேலும், இரவு 10.30 மணிக்கு நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மேட்டூர் அணை - மேச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வெள்ளோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.