சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில், சேலம் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி வளாகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.
பின் அவர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் வழிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், மரகன்றுகளையும் வழங்கினார். அதன் பிறகு பள்ளி வளாகத்தில் மரகன்றுகளை நட்டார்.