சேலம் மாநகராட்சிப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏரி, குளங்கள் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதையடுத்து ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும், மீன் உற்பத்தி அதிகரித்து இருப்பதாலும் மீன் பிடித் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மீன் பிடித் தொழில் செய்து வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் தொடர்ந்து உயர்ந்து வரும் நீர் கொள்ளளவு, அருகில் அமைக்கப்படும் குடிசை மாற்று வாரியப் பணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க...சேலத்தாம்பட்டி ஏரியை ஆய்வு செய்த ஆட்சியர்!