ETV Bharat / state

அஞ்சல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அலுவலர் ரோகினி! - வாக்காளர் பட்டியல்

சேலம்: தேர்தல் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகினி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 7, 2019, 5:29 PM IST

சேலம் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகினி வெளியிட்டார். தொடர்ந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

தேர்தல் அலுவலர் ரோகினி
தேர்தல் அலுவலர் ரோகிணி
district-election-officer-roshini
விழிப்புணர்வு பேரணியை தொடக்கிவைத்தபோது...

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 15 ஆயிரத்து 787 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சேலத்தில் 11 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை தேர்தல் அலுவலக பணியாளர்கள் முகவர்கள் முன்னிலையில் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் போதுமானது, அரசின் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

சேலம் 7.4.2019
M.kingmarshal-stringer 

தேர்தல் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தகவல்...

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை எனினும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும் மாற்று அரசு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் தகவல்...

சேலம் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி வெளியிட்டார். தொடர்ந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் அனைவரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை எனவும், நூறு சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது மாநகரின் முக்கிய பிரதான வழி சாலைகள் வழியே சென்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் முடிவடைந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்கள் அனைவரும் வரும் 18ஆம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த வகையில் இதுவரை 5.91 கோடிக்கு மேற்பட்ட பணம் உரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2 கோடி மதிப்பிலான 4.39 கிலோ தங்கம் 77 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் வங்கி உள்ளிட்ட கட்டாய பாதுகாப்பு காரணங்களைத் தவிர மற்ற 1972 அனைத்து அனுமதி பெற்ற துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், யார் அச்சுறுத்தலும் இன்றி  பொதுமக்கள்  வாக்களிக்கும் வகையில் இதுவரை 293 பேர் மீது காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சேலம் மாவட்டத்தில் அனைத்து கட்சியினர் மீதும் சுமார் 53 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 15 ஆயிரத்து 787 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சேலத்தில் 11 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை தேர்தல் அலுவலக பணியாளர்கள் முகவர்கள் முன்னிலையில் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் போதுமானது அரசின் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி - ரோகிணி, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.