கரோனோ பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஒரு மாதம் கடந்த நிலையிலும், தடை உத்தரவு நீடிப்பதால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் நிவாரண உதவிகளாக வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி சார்பில், பச்சப்பட்டி பகுதிவாழ் ஏழை எளிய மக்களுக்கு இரண்டரை டன் அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
பேட்டி : வி.ந.தமிழன், மாநில துணை செயலாளர், விசிக இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வி.நா. தமிழன் , விசிக பொருளாளர் காஜாமைதீன், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பச்சப்பட்டி பகுதி வாழ் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.நா.தமிழன், "கரோனோ ஒழிப்பில் அனைவரும் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும். இந்நிலையிலும், விசிக தலைவர் தொல். திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை ஏற்று தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களை மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறோம் "என்று தெரிவித்தார்.இதையும் படிங்க: கரோனா: மனித குலத்திற்கு அன்னை பூமி உணர்த்தும் பாடம் - தலாய்லாமா