மதுரையில் மாபெரும் உணவுப்பொருள் தொழில் வர்த்தக பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் சேலத்தில் அளித்த பேட்டியில்,"
இந்தத் தொழில் வர்த்தக பொருட்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்களும் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்களும் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் வேளாண் உற்பத்தியாளர்கள் உணவு பதனிடும் தொழில் வணிகம் செய்பவர்களும் தங்கள் பொருட்களை பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பாக இந்த பொருட்காட்சி அமையும்" என்று தெரிவித்தார்.