சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் 16ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி கொளத்தூர் மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள அவரது சமாதியில் நடைபெற்றது. இதில், வீரப்பனின் மனைவி, மகள், ஆதரவாளர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பனின் மனைவியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெண்கள் பிரிவின் மாநிலத் தலைவருமான முத்துலட்சுமி, 'ஆண்டுதோறும் நடைபெறும் என் கணவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்குவோம். இந்தாண்டு கரோனாவைக் காரணம்காட்டி அன்னதானம் போட அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும்" என்றார். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க வீரப்பனின் சமாதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்' - முத்துலட்சுமி பிரத்யேக பேட்டி