ETV Bharat / state

வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் மரணம்! - மாதையன்

வீரப்பனின் கூட்டாளிகளில் சிறையில் உயிரோடு இருந்த கடைசி நபரான மீசை மாதையன் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மாதையனின் இறுதிச் சடங்கில் வீரப்பனின் மனைவி கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

sandalwood smuggler Veerappan wife is going to attend the funeral of Veerappan partner madhaiyan it has been reported
மரணமடைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாதையனின் இறுதிச்சடங்கில் வீரப்பனின் மனைவி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
author img

By

Published : Apr 17, 2023, 12:14 PM IST

சேலம்: தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு 25 ஆண்டுகாலமாகப் போக்குக் காட்டி, யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் மற்றும் சந்தன மரங்களைக் கடத்தி விற்பனை செய்து வந்தவர் வீரப்பன். கடந்த 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16), வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவரும், வீரப்பன் குடும்பத்துக்குப் பங்காளி உறவான மீசை மாதையன் உயிரிழந்தார். மீசை மாதையன் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக இருந்துள்ளது. இவரின் தம்பி சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மகன் மாதேஷ் ஆகியோர் வீரப்பன் சந்தனமரக் கடத்தல் வியாபாரம் செய்த நேரத்தில், வீரப்பனின் குழுவில் முதன்மை இடத்திலிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தன மர கடத்தலில் தொடர்புடைய வீரப்பன் உள்ளிட்ட பலரையும் கைது செய்யும் நோக்கில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா மாநில போலீசார் பல ஆண்டுகளாகத் தேடி வந்தனர். போலீசாரின் தேடுதலுக்குப் பயந்து மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டிற்குள் அனைவரும் தலைமறைவாக இருந்தனர். தலைமறைவானார்களில் சாமிநாதன் மட்டும் கடந்த 1991ம் ஆண்டு வனத்துறையினரிடம் சரணடைந்தார்.

அதனைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு, முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 1998-ஆம் ஆண்டு மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ், சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில், தமிழ்நாடு அதிரடிப்படை ஆய்வாளர் மோகன் நவாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனிடையே, 1993- ம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்த மீசை மாதையன் கர்நாடக போலீசில் சரணடைந்தார். அவர் மீது நான்கு தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் முறையீட்டு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியது.

இதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனுவைத் தள்ளுபடி செய்தார். நால்வருக்கும் தூக்கில்போட நாள் குறிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் கடுமையான போராட்டம் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர், குடியரசுத்தலைவர், கருணை மனுவை ஒன்பது ஆண்டுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தினால், இந்த நால்வரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான முதல் அமர்வு தீர்ப்பை வழங்கியது.

ஜனவரி 2014-இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும், சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் வைத்திருந்தனர். 2018 மே மாதம் சைமன் என்பவரும், 2022-இல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர். 2023-பிப்ரவரியில் சிறுநீரகம் பழுதான ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார்.

31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த மீசை மாதையன் கடந்த 11-ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் நேற்று (ஏப்ரல் 16) மாலை மூன்று மணிக்கு நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

மாதையனின் இறுதிச் சடங்கில் வீரப்பனின் மனைவி கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வீரப்பனின் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் இந்த மீசைக்கார மாதையன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கூட்டணி வேறு; கொள்கை வேறு" அண்ணாமலையை ஒதுக்கும் எடப்பாடி.. நீர் பூத்த நெருப்பாய் தொடரும் யுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.