ETV Bharat / state

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் - விசிக கோரிக்கை - ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என விசிக கோரிக்கை

சேலம் : மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

vck petition open borewells issue
author img

By

Published : Oct 29, 2019, 5:03 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில், குழந்தை சுஜித் திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு சார்பில் குழந்தையை உயிருடன் மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட அந்தந்தப் பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் சேலம், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மூடப்படாமல் திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

அந்த மனுவில், "சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருக்கிறது. இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே பல ஆண்டாக மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடிட வேண்டும். இதுவரை மூடாமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டி சேலத்தில் குழந்தைகள் பிரார்த்தனை!

Intro:சேலம் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் , குழந்தை சுஜித் திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரசு சார்பில் குழந்தையை உயிருடன் மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட அந்தந்தப் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மூடப்படாமல் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனே மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி பயிற்சி செயலாளர் மு. இமயவரம்பன் அளித்துள்ள மனுவில்," சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருக்கிறது.

இதேபோல மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே பல ஆண்டுகளாக மூடப்படாமல் கிடக்கும் ஆள்துளை கிணறுகளை மூடிடவும் இதுவரை மூடாமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.

(பேட்டி: மு.இமயவரம்பன்,
விசிக, மாநில செயலாளர், தொண்டர் அணி.)

Conclusion:ஆழ்துளை கிணறுகளை மூடாமல் மெத்தனப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.