ETV Bharat / state

15 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது!

சேலம்: காடையாம்பட்டி தாலுக்காவில் சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது
author img

By

Published : Aug 6, 2019, 9:06 AM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி தாலுக்காவின் நடுப்பட்டி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக ரங்கநாதன் என்பவரும், கிராம உதவியாளராக ராஜா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன.

இந்நிலையில், நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற விவசாயி, ஒன்றியத்தில் ஒப்பந்தப் பணிகள் செய்வதற்காக தனக்குச் சொத்து மதிப்பு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி மணி, இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை மணியிடம் கொடுத்தனுப்பினர். இதனையடுத்து, இரவு எட்டு மணிக்கு மணியை வீட்டிற்கு வரவழைத்து, ரங்கநாதன் லஞ்சம் பெற முயன்றபோது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாகக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கிராம உதவியாளர் ராஜாவை தேடி வருகின்றனர்.

Intro:சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி தாலுக்கா நடுப்பட்டி அருகே விவசாயியிடம் சொத்து மதிப்பு சான்று வழங்க 15 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து உள்ளனர்.Body:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்காவில் நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ரங்கநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும், இந்த கிராமத்தின் உதவியாளராக ராஜா என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளரும் கூட்டு சேர்ந்து அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில், நடுப்பட்டி கிராமம் தெற்கத்தியான்காட்டுவளவு பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் மணி என்ற விவசாயி, ஒன்றியத்தில் ஒப்பந்த பணிகள் செய்வதற்காக தனக்கு சொத்து மதிப்பு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் மணியின் சொத்துகளுக்கு மதிப்பீடு செய்து சான்று வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு விவசாயி மணி தன்னிடம் உள்ள சொத்துக்களுக்கு மதிப்பீடு சான்று வழங்க எதற்கு 15 ஆயிரம் ரூபாய் என்று கேட்டுள்ளார்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் 15 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே சொத்துக்களை மதிப்பீடு செய்து சான்று வழங்க முடியும் . இல்லையென்றால் சான்று வழங்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மணி, நிர்வாக அலுவலர் ரங்கநாதன் தன்னிடம் சொத்துமதிப்பு சான்று வழங்க 15 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி சந்திரமெளலியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினர்.

ஆனால், காலையில் இருந்து பணத்தை வாங்காத கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், மாலையில் வீட்டிற்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அதனால், நேற்று காலையில் இருந்து இரவு வரை லஞ்ச ஒழிப்புத போலீசார் காத்திருந்தனர்.

பின்னர் இரவு எட்டு மணிக்கு விவசாயி மணியை வீட்டிற்கு வரவழைத்து , லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ரங்க நாதன் வாங்கினார்.

அப்போது மறைந்திருந்த போலீசார் ரங்கநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் சொத்து மதிப்பு சான்று வழங்க லஞ்சமாக 15 ஆயிரம் வாங்கியதை ரங்கநாதன் ஒப்புகொண்டார்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக உதவியாளர் ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

மேலும், அவருடன் அவரது வீட்டில் இருந்த காடையாம்பட்டி வடக்கு கிராம அலுவலர் சங்கர் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:
தொடர்ந்து லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதனை கைது செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரிடம் இரவு முழுக்க விசாரணை நடத்தினர்.

அப்போது ரங்கநாதன் கூறிய தகவல்கள் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.