ETV Bharat / state

'பட்ஜெட் 2020இல் பல்வேறு சோதனை முயற்சிகள்' - வைகைச்செல்வன் - பட்ஜெட் 2020

சேலம்: மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்  தெரிவித்தார்.

பட்ஜெட் 2020-இல் பல்வேறு சோதனை முயற்சிகள் - வைகைச்செல்வன்

author img

By

Published : Feb 2, 2020, 5:21 PM IST

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் குறித்து வைகைச்செல்வன் கூறுகையில், "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை முதலமைச்சர் வரவேற்றுள்ளார். தனிநபர் வருமானத்தைப் பொறுத்த அளவில், நல்ல நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில், அதிக நிதி ஒதுக்கீடு மூலம் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, 4.8 விழுக்காடாக இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் மேம்பாட்டை உருவாக்கும். இது போகப்போகத்தான், தெரிய வரும். நாட்டைப் புதிய பொலிவுடன் கட்டுமானம் செய்யும் நிலைக்கு இந்த பட்ஜெட் அழைத்துச் செல்லும் என அதிமுக கருதுகிறது. எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தளவில் அடுத்தடுத்த கட்டங்களில்தான், திட்டங்கள் உருவாகும். தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

'பட்ஜெட் 2020இல் பல்வேறு சோதனை முயற்சிகள்' - வைகைச்செல்வன்

விமான சேவை, ரயில் சேவை தனியார் மயம் போல், எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பதை, நஷ்டத்தில் செல்லும் நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் புதிய பாதையாக பார்க்க வேண்டும். பட்ஜெட்டில் இது சோதனை முயற்சி என சொல்லப்பட்டுள்ளது. அதனால் போகப்போக விளைவுகளை பார்த்துதான் கருத்து சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஷ்வ இந்து மகா சபா மாநிலத் தலைவருக்கு துப்பாக்கிச் சூடு

Intro:சேலத்தில் இன்று அஇதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.Body:அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,"
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை முதல்வர் வரவேற்றுள்ளார்.

தனிநபர் வருமானத்தை பொருத்த அளவில், நல்ல நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில், அதிக நிதி ஒதுக்கீடு மூலம் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, 4.8 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் மேம்பாட்டை உருவாக்கும்.

இது போகப்போகத்தான், தெரியவரும். நாட்டை புதிய பொலிவுடன் கட்டுமானம் செய்யும் நிலைக்கு இந்த பட்ஜெட் அழைத்துச் செல்லும் என அதிமுக கருதுகிறது. எதிர்காலத்தில் நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கலாம்.

வேலைவாய்ப்பை பொருத்தளவில் அடுத்தடுத்த கட்டங்களில் தான், திட்டங்கள் உருவாக்கித் தரும்.

தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை, ரயில் சேவை தனியார் மயம் போல், எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு கொடுப்பதன் மூலம், நஷ்டத்தில் செல்வதை லாபகரமான பாதைக்கு மாற்றும் புதிய பாதையாக பார்க்க வேண்டும் .

பட்ஜெட்டில் இது பரிசாத்த முயற்சி என சொல்லப்பட்டுள்ளது.

Conclusion:
பட்ஜெட்டில் இது பரிசாத்த முயற்சி என சொல்லப்பட்டுள்ளது.

அதனால் போகப்போக விளைவுகளை பார்த்துதான் கருத்து சொல்ல முடியும்." என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.