சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரஞ்சித் அங்குள்ள தண்ணீர் குட்டையில் வாத்துகள் நீந்துவதைக் கண்டு விளையாடச் சென்றுள்ளார். அப்போது வாத்தை பிடிக்க முயன்ற குழந்தை, எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் கதறி அழுதனர். தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தகவலறிந்த கொங்கணாபுரம் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு!