ETV Bharat / state

வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியான விவகாரம்... சிசிடிவி காட்சியில் சிக்கிய ரயில்வே ஊழியர்கள்! அவசரகால கதவால் வந்த சோதனை!

Vande Bharat train accident: வந்தே பாரத் ரயிலில் இருந்து பயணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அவசர கால கதவின் பட்டனை அழுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக இரண்டு ரயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Vande Bharat train accident
வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி... 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 12:55 PM IST

Updated : Sep 30, 2023, 1:02 PM IST

Salem Vande Bharat Train Accident

சேலம்: சென்னை - கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26ஆம் தேதி, வந்தே பாரத் ரயிலில் சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70), அவரது மனைவி ரோஸ் மார்க்ரேட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

இந்நிலையில் மாலை 6.05 மணிக்கு சேலத்திற்கு வந்த, வந்தே பாரத் ரயில், 4வது பிளாட்பாரத்தில் நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ், ரயிலின் அவசரக் கதவு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவசரக் கதவு திறக்கவும், மறுபுறத்தில் இருந்த 5வது பிளாட்பாரத்தின் தண்டவாளத்தில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

சுமார் 6 அடி உயரத்திற்கு மேல் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பவுலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தார். பின்னர் அவர், நேரடியாக கோவைக்கு புறப்பட்டுச் சென்று, விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சேலம் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்தே பாரத் ரயில் வந்து நின்றது.

அப்போது 5வது பிளாட்பாரம் பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் தண்டவாளப் பாதை வழியே இறங்கி வந்து, வந்தே பாரத் ரயிலின் அவசர கதவின் பட்டனை அழுத்தி திறந்து உள்ளனர். பின்னர் ரயிலில் ஏறி மறு முனையில், 4வது பிளாட் பார்மில் இறங்கிச் சென்றதும் தெரிய வந்தது.

அந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில், அவசர கதவு பகுதிக்கு வந்த பவுலேஷ், கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை திறந்து வைத்த ரயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தி வந்தார்.

அதில் அவர்கள், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், ஒய்.எஸ் மீனா என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

அதன் பேரில் தற்போது கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள், துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை 2 ஊழியர்கள் திறந்து வைத்ததால் தான், பயணி தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு! அதிகாலை நடந்த சோகம்!

Last Updated : Sep 30, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.