ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் இருவர் கைது!

சேலம்: வெவ்வேறு பகுதிகளில் மாணவிகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த அவசர ஊர்தி ஓட்டுநர், கட்டுமானத் தொழிலாளி ஆகியோரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கைது

author img

By

Published : May 28, 2020, 1:26 PM IST

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது கணவர் இறந்த நிலையில் என்னுடைய 17 வயதான மகளையும், மகனையும் படிக்கவைத்துவருகிறேன். குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறேன்.

இந்நிலையில், எனக்கு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த அவசர ஊர்தியின் ஓட்டுநரான அசோக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில், அசோக்குமார் எனது 17 வயது மகளை அடைய திட்டம் தீட்டினார்.

அதனையறிந்த நான் அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டு, தனியாக வந்துவிட்டேன். ஆனால், அசோக்குமார் அவரது கூட்டாளியான கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவருடன் சேர்ந்து எனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் அசோக்குமாரை கைதுசெய்தனர். மேலும், அவரது கூட்டாளி குமாரை வலை வீசித் தேடிவருகின்றனர்.

இதேபோல சேலம், சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சீனிவாசன் என்பவருக்கும் பேருந்து பயணத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளியான சீனிவாசன், மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்.

இது குறித்து மாணவி, அவரது பெற்றோரிடம் கண்ணீர் விட்டு அழுது புலம்பியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இச்சம்பவம் குறித்து டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.