ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கல்லால் அடித்துக் கொலை செய்த நபர்கள் கைது - உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!

author img

By

Published : Sep 5, 2020, 4:12 PM IST

சேலம் : முன் விரோதம் காரணமாக ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Two arrested for stoning to death
Two arrested for stoning to death

சேலம், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சட்ட விரோதமாக நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அகமது பாஷாவின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ், லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழுந்துள்ளதாகத் தெரிவிக்கும்படி அகமது பாஷாவிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அகமது பாஷைவைத் தாக்கிய சதீஷ், கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெளியே வந்த சதீஷ் மீண்டும் அகமது பாஷாவுடன் நட்புடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு, ஆட்டோ ஓட்டுநர் சதீஷ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து அகமது பாஷாவை லாட்டரி பணம் தொடர்பாக பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு வந்த அகமது பாஷாவிடம் சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அகமது பாஷா அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக ஒருவர் கல்லால் அடித்துக்கொலை

அப்போது அவரைக் கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த கற்களைக் கொண்டு சதீஷ், அகமது பாஷாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அகமது பாஷா, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அகமது பாஷா நேற்று இரவு (செப்.04) உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிச்சிப்பாளையம் காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு பேரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மாடுகள் திருட்டு: மாட்டிவிட்ட மூன்றாம் கண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.