ETV Bharat / state

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் மூவர் நீதிமன்றத்தில் சரண்

சேலம்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தனியார் ஏஜென்சி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

trichy murder accused
trichy murder accused
author img

By

Published : Jan 10, 2020, 8:05 AM IST

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலுடன் கடந்த 6ஆம் தேதி ராஜசேகரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அவரை வெட்டியுள்ளனர். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் தொடர்புடைய கலைச்செல்வன், கோபால், மேசக் பிரபு ஆகிய மூன்று பேரும் வியாழக்கிழமை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் சரணடைந்தனர்.

திருச்சி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்

இதனையடுத்து அந்த மூன்று பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்குமாறு நீதிபதி சிவா உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு!

Intro:

திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் ஏஜன்சி உரிமையாளரை கொலை செய்த குற்றவாளிகள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் ..க்ஷ
Body:

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலுடன் கடந்த 6ம் தேதி ராஜசேகரின் வீட்டில் புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கலைச்செல்வன் கோபால் மேசக் பிரபு ஆகிய மூன்று நபர்களும் இன்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா அவர்கள் முன்னிலையில் சரணடைந்தனர்.
Conclusion:
இவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.