சேலம் மாவட்ட கருவூல அலுவலர் ஹெச். மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சூழ்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட கருவூல அலுவலகம், பிற பகுதிகளில் உள்ள சார் கருவூல அலுவலகங்கள் அனைத்தும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் சம்பளம், ஓய்வூதியம் தடையின்றி வழங்க கரோனா காலத்திலும் கருவூல பணியாளர்கள் அனைவரும் வருகைதந்து பணியாற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.