ETV Bharat / state

அந்நிய நிறுவனங்களின் வணிகத்திற்கு துணை போகும் அரசுகள் - த. வெள்ளையன் - சேலம்

அந்நிய நிறுவனங்களின் வணிகத்திற்கு துணை போகும் மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் தா. வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்.

salem merchant
salem merchant
author img

By

Published : Mar 25, 2023, 7:31 PM IST

சேலம்: உள்நாட்டு வணிகத்தை சீரழித்து அந்நிய வணிகத்தை தழைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்று சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் 40ஆவது ஆண்டு வணிகர் தின விழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட வணிகர் சங்க பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தா. வெள்ளையன் கலந்து கொண்டு வணிகர் தின விழா குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு செங்கல்பட்டு அடுத்த அச்சரப்பாக்கத்தில் நடைபெறும்.

தமிழகத்தில் ஆன்லைன் வணிகம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு வணிகத்தை பெரிதும் சீரழித்து அந்நிய வணிகத்தை தழைக்க செய்ய மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நம் நாட்டு ஆட்சியாளர்கள் அந்நிய வணிகத்திற்கு துணையாக நின்றுகொண்டு நம் நாட்டு வணிகத்தை சீரழித்து வருகிறார்கள்.

உள் நாட்டு வணிகத்தை காப்பாற்றாமல் போனால் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுக்கூடும். அந்நிய ஆதிக்கத்தை முறியடித்து உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாமக்கல்லில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் - கிராம மக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.