ETV Bharat / state

காசியில் இறந்த தாயின் உடலை கொண்டுவர வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்!

சேலம்: காசியில் உயிரிழந்த தாயின் உடலை சேலத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத்தினர் போராட்டம்
author img

By

Published : Jun 17, 2019, 11:31 AM IST

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் என்கின்ற ராஜீவ். இவர் மனைவி ராணி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவருகிறார்.

கடந்த 10ஆம் தேதி அர்ஜுனனும், ராணியும் சேலத்திலிருந்து காசிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ராணி உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இறந்த ராணியின் உடலை சேலம் கொண்டுவர முடியாமல் அவரது கணவர் அர்ஜுன் காசியில் தவித்துவருகிறார்.

இது குறித்து அர்ஜுன் தொலைபேசி வாயிலாக சேலத்தில் இருக்கும் தனது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் உறவினர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது சம்பந்தமாக மனு கொடுக்க வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், காசியிலிருந்து ராணியின் உடலை சேலம் கொண்டுவர ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

Intro:காசியில் உயிர் இழந்த தாயின் உடலை சேலத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகன்கள் மகள்கள் 25க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

Body:சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் என்கின்ற ராஜீவ். இவர் மனைவி ராணி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த 10ஆம் தேதி அர்ஜுனனும் ராணியும் சேலத்திலிருந்து காசிக்கு 25 நபர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை இராணி திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழந்த ராணியின் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரின் உடலை செயலும் கொண்டுவர முடியாமல் அவரது கணவர் அர்ஜுன் காசியில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அர்ஜுன் தொலைபேசி வாயிலாக சேலத்தில் இருக்கும் தனது மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதையடுத்து செய்வதறியாது திணறிய மகன்கள் சுமார் 25-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காசியிலிருந்து ராணியின் உடலை சேலம் கொண்டுவர ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Conclusion:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுமுறை தினமான இன்று சுமார் 25க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.