ETV Bharat / state

'அணைகள் பாதுகாப்பு மசோதாவில் மாற்றம்...!' - எடப்பாடி வலியுறுத்தல்

சேலம்: அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018இல் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவருவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 21, 2019, 7:39 PM IST

cm

சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதின் முக்கிய அம்சங்கள்:

  • தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தைப் பெருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது, அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா 2018இல் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எந்த மாநில அரசும் அணை கட்டவும் தடுப்பணை கட்டவும் கூடாது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில அரசுகளும் இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும்.
  • பக்தர்கள் பிரச்னை ஏதுமின்றி அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு செல்ல ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. மேலும், அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
  • சேலம் இரும்பாலையைப் பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட வேண்டும்.
  • உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டுவருகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.
    முதலமைச்சர் எடப்பாடி சேலத்தில் நிகழ்த்திய உரை
  • ஆற்றங்கரையோரம் கான்கிரீட் கரைகள் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதன்மூலம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகாமல் விளைநிலங்களுக்குச் செல்லும்; அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவை பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் 20 விழுக்காடு அளவுக்கு நீர் மிச்சப்படுத்தப்படும்.

Intro:தமிழகத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018 இல் மாற்றம் செய்ய கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் . உச்சநீதிமன்ற தீர்ப்புபடி எந்த மாநில அரசும் அணை கட்டவும் தடுப்பணை கட்டவும் கூடாது குறிப்பாக தமிழகம் கர்நாடகா கேரளா ஆந்திரா ஆகிய நான்கு மாநில அரசுகளும் இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர்," காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இடமாற்றம் செய்வது குறித்து 4 அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் குருக்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

அதில் பக்தர்கள் பிரச்சனை ஏதும் இன்றி அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

சேலம் இரும்பாலையைப் பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது . உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வருகிறது .

அந்த வரையறை முடிவு முடிந்த பிறகு எந்த தேதியில் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை என்பது வேறு மாநில பிரச்சனை அதில் கருத்து கூற விரும்பவில்லை.

ஆற்றங்கரையோரம் கான்கிரீட் கரைகள் அமைத்து நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது. கான்கிரீட் கரை அமைப்பின் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் விளைநிலங்களுக்கு செல்லும்.

அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவே இந்த கான்கிரீட் வரை பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் 20 சதவிகிதம் அளவுக்கு நீர் மிச்சப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

Conclusion:முன்னதாக சேலம் தாரமங்கலம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புறவழிச்சாலையை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்," சேலம் இரும்பாலை பகுதியில் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"
என்று தெரிவித்தார் .

அதேபோல எடப்பாடி பகுதியில் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்," மேட்டூர் அணையின் உபரி உபரிநீர் எடப்பாடி சங்ககிரி ஏற்காடு ஓமலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூறு ஏரிகளை நிரப்பிடும் வகையில் 565 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.