புதுடெல்லி: தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதான வாக்குறுதிகளை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்கக்கோரி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை கவர இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், நிதி சுமையை காரணம் காட்டுவிடுவதால் பொதுமக்களும் ஏமாறும் சூழல் உள்ளது. அதே போல, வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில் அரசு நிதி நெருக்கடியிலும் தள்ளப்படும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஷஷாங்க் ஜே ஸ்ரீதரா என்பவர் இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நிதி சரிபார்க்கப்படாமல் அறிவிக்கப்படும் இலவசங்களால் கடுமையான நிதி சுமை ஏற்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய எந்த அமைப்பும் கிடையாது. எனவே, அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அளிப்பதைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு.. பெற்ற தாயே குழந்தைகளை கொன்ற கொடூரம்!
மேலும், இதே போல மனுக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிட ஒப்புக்கொண்டது.
அந்த வகையில், இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இலவச வாக்குறுதிகளை எதிராக மனு தாரர் தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்