ETV Bharat / international

அமெரிக்காவிடம் இருந்து 4 பில்லியன் டாலர் மதிப்பிலான 31 ட்ரோன்களை வாங்கும் இந்தியா - PREDATOR DRONE DEAL WITH US

எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்ற வானில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பறக்கக்கூடிய 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 31 ட்ரோன்களை அமெரிக்காவிடம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலின் மேலே பறக்கும் எம்க்யூ-9பி ட்ரோன்
அட்லாண்டிக் கடலின் மேலே பறக்கும் எம்க்யூ-9பி ட்ரோன் (image credits-ga-asi.com)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 3:26 PM IST

புதுடெல்லி: இந்தியாவின் போர் வலிமையை அதிகரிக்கும் முக்கியமான நோக்கத்தின் அடிப்படையில் வெளிநாட்டு ராணுவ விற்பனையின் கீழ் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வானில் நீண்டநேரம் தாக்குப் பிடித்து பறக்கும் வல்லமை பெற்ற எதிரிநாட்டை தாக்கும் திறன் பெற்ற 31 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இந்தியா வாங்குகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 20 நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ட்ரோன்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் போது அமெரிக்கா, இந்தியா நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் முன்னணி ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேல் லால் இதில் பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் எம்க்யூ-9பி எனும் எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சீனாவுடன் எல்லைப் பிரச்னையில் இந்தியா பதற்றமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனுக்கு இந்த ட்ரோன்கள் வலுசேர்க்கும் வகையில் இருக்கும்.எம்க்யூ-9 ரீப்பரின் எம்க்யூ-9பி ட்ரோன் வகைகள் அதன் செயல் திறனில் புகழ் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் காபூல் நகரில் அல்-கைய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி என்பவர் ரீப்பர் வகை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

இதையும் படிங்க : அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஒ சாதனை! அமைச்சர் ராஜ்நாத் வாழ்த்து!

இந்த கொள்முதலில் கடற்படைக்கு 15 கடல் பாதுகாப்பு ட்ரோன்கள், இந்திய விமானப்படை, தரைப்படை ஆகியவை தலா 8 வான் பாதுகாப்பு ட்ரோன்களும் வாங்கப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் வான்வெளியில் மிக உயரத்தில் 35 மணி நேரத்துக்கும் அதிகமாக தாக்குப்பிடித்து பறக்கக்கூடியவையாகும். இந்த ட்ரோன்கள் மூலம் வானில் இருந்து தரை இலக்கைக் தாக்கக் கூடிய நான்கு ஏவுகனைகள், 450 கிராம் வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல முடியும்.

கடற் பாதுகாப்பில் ஈடுபடும் வகையிலான ட்ரோன்கள் பல் திறன் கொண்ட கடற்பகுதி கண்காணிப்பில் திறன் படைத்ததாகும். நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போரிலும் பயன்படுத்த முடியும். சிக்கலான பிராந்தியங்களில் ராணுவத்தின் வலுவை விரிவாக்கம் செய்ய முடியும்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.