ETV Bharat / state

'தாய்க்கழகத்துக்கு சாரைசாரையாக வரும் அமமுகவினர்!' - எடப்பாடி மகிழ்ச்சி

சேலம்: சாரை சாரையாக தாய்க்கழகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வந்துகொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதலமைச்சர்
author img

By

Published : Jul 23, 2019, 1:46 PM IST

பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஆறு மாதத்தில் ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த தேர்தலிலும் அதிமுக ஆட்சியை அமைக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தினகரன் கட்சியினர் கேட்பொலி (ஆடியோ) வெளியிடட்டும், நாங்களும் அதற்குத் தயாராக இருக்கிறோம் என சொன்ன எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஏதாவது டூப் விட்டுக்கொண்டுதான் இருப்பார் என்றார்.

ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் கூறியதை சுட்டிக்காட்டிய பழனிசாமி, இப்போது எல்லாம் தங்களிடம் வந்துவிட்டதாகக் கூறினார். சாரை சாரையாக தாய்க்கழகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வந்துகொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

சேலத்தில் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

சட்டக்கல்லூரி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி, சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Intro:மேட்டூர் உபரி நீரை சேலம் மாவட்டத்தின் நூறு ஏரிகளில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்துவதன் மூலம் விவசாயம் தங்கு தடையின்றி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Body:பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். முதலமைச்சர் கூறுகையில்," மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி,ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நூறு ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் நிரப்பப்படும்.

இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். மக்களின் தேவைக்கு மேலாக கடலுக்குச் செல்லும் உபரிநீரை முழுமையாக பயன்படுத்த முடியும்.

கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுகின்ற போது அதில் கிடைக்கும் நீரை சேகரிக்க கரூர் ,மாயனூர் வரையில் உள்ள இடத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்படும்.

50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் எடுத்து ஏரி குளங்களில் நிரப்பப்படும். இதனால் வறட்சியான பகுதியில் இருக்கிற சேலம் மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவார்கள் .

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் எல்லாம் lift irrigation மூலமாக வறண்ட பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள் குளங்களில் நீரை நிரப்பி விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குகிறார்கள்.

இதன் மூலம் நாமும் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் நீரை பயன்படுத்த முடியும். மேலும் மூன்று கதவணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே அமைப்பதற்கு ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த பணிகள் விரைந்து முடிக்க படும். 90 அடி உயரத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பிய பொழுது திறக்கப்படும். தற்போது கேரளாவிலும் குடகு பகுதியிலும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது .

அந்த நீர் மேட்டூர் அணைக்கு முழுமையாக வருகின்ற பொழுது டெல்டா பாசன விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்கான நீர் திறந்துவிடப்படும்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக கொடுத்தால் மிகவும் சந்தோஷம்.

இன்று காலையில் வங்கி விழாவில் 70 விவசாயிகள் எங்களுடைய நிலத்தை எடுத்துக் கொண்டு வேலை வாய்ப்பு கொடுங்கள் விரைவுச்சாலை வந்தால் நல்லது என்று என்னிடம் மனு கொடுத்தார்கள்.

விரைவுச்சாலையை பலர் விரும்புகிறார்கள். சிலர் வெறுக்கிறார்கள். விரைவுச்சாலை சேலத்திற்கு மட்டுமல்ல. நாமக்கல்,கரூர், மதுரை என்று கேரளா வரைக்கும் செல்கிறது.

இது மத்திய அரசின் முக்கியமான திட்டம். இதுகுறித்து ஊடகத்தினரும் பலமுறை கேள்வி கேட்டு விட்டீர்கள்.

தமிழக அரசுக்கு யாரையும் வற்புறுத்தியோ மனசங்கடத்திற்கு ஆளாக்கியோ நிலத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட கிடையாது.

திமுக ஆட்சி காலத்தில் நிலம் கையகப்படுத்தும் போது அதில் அமைந்துள்ள வீட்டிற்கு உண்டான கழிவு தொகைக்கான பணத்தைத்தான் வழங்கினார்கள்.

இப்பொழுது கழிவுத்தொகை இல்லாமலேயே பணம் வழங்குகின்றனர் . அதேபோல தென்னை மரத்திற்கு கிட்டத்தட்ட 40,000 ரூபாய் வரை வழங்குகிறார்கள்.

எனவே யாருக்கும் எந்தவித கஷ்டமும் ஏற்படாத வண்ணம் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டிருக்கிறோம்.

தீவிரவாத இயக்கங்களை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு இணக்கமாக இருந்து செயல்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் இருப்பவர்கள் கட்சியில் இருப்பவர்கள் திமுகவிற்கு எல்லாம் செல்லவில்லை . அவர்கள் கனவு காண்கிறார்கள். ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று.

ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன அடுத்த தேர்தலிலும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.

தினகரன் கட்சியினர் ஆடியோ வெளியிடட்டும். நாங்களும் அதற்கு தயாராக இருக்கிறோம்.

அவர் ஏதாவது டூப் விட்டுக் கொண்டுதான் இருப்பார் . ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறினார் . இப்போது எல்லாம் எங்களிடம் வந்து விட்டார்கள்.

சாரை சாரையாக தாய்க்கழகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வந்துகொண்டிருக்கின்றனர்.

சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

Conclusion:பேட்டியின்போது எம்எல்ஏக்கள் சக்திவேல், செம்மலை ,வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.