சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் சுப்பையா என்பவர் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைதொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சுப்பையா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாப்பெட்டியில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
மேலும் காவல் துறையினர் விசாரணையில் மளிகை கடையில் மூன்றாவது முறையாக நடைபெறும் திருட்டு சம்பவம் என்பது தெரியவந்தது.