சேலம்: இது குறித்து அவர் இன்று (ஜனவரி 11) செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், "தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டு காலமாக தற்போது உள்ள அரசு குறைத்துள்ளது.
இந்தக் காலக் குறைப்பு அரசியல் உள் நோக்கத்தின் காரணமாக, தங்களுடைய கட்சி பிரமுகர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது தற்போது 2022ஆம் ஆண்டு ஒருமுறை தேர்தலும், தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் மீண்டும் ஒரு தேர்தல் என இருமுறை தேர்தல் நடத்தப்படும்.
அப்போது தங்களுக்குச் சொந்தமான கட்சி பிரமுகர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வார்கள். மீண்டும் மாற்றி ஆட்சி அமைக்கின்றபோது தற்போது ஆட்சியில் உள்ள நபர்களின் திமுக பிரதிநிதிகளே அப்போதும் பதவியில் இருப்பார்கள். இது முழுக்கமுழுக்க அரசியல் நோக்கத்திற்கானது.
இது திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குகின்ற செயலை இந்த அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திட்டமிட்டபடி எங்களின் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும்.
எங்கள் கள் இறக்கும் போராட்டத்திற்கு அரசியல் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும். இல்லை என்றால் இதில் உள்ள குறைகளை வாதிட எங்களுடன் வர வேண்டும். தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் திட்டமிட்டபடி ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.40 கோடி மதிப்பிலான 12 புராதன சிலைகள் மீட்பு