சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபான், இவரது மனைவி ஆபிதா பேகம் இவர்களுக்கு மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுதிறனாளி மகன்கள் இருவர் உள்ளனர். 22 ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் பணிவிடை செய்து வருகின்றனர். இதனிடையே சமீனா என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர், ஆறு வருடங்களுக்கு முன்பு கணவர் சுபான் இறந்து விட்டார். ஆபிதா பேகம், தனி ஆளாக மூன்று பேரையும் வளர்த்து வந்தார், வளர்ப்பு மகள் சமீனாவிற்கு திருமணம் நடத்தி முடிந்தார்.
இந்நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகன்களுக்குப் மருத்துவ செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் ஆபிதா பேகம் தனக்குச் சொந்தமான ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அனால், வளர்ப்பு மகள் சமீனா வீட்டை விற்கக்கூடாது என்றும் அதனை தனது பெயரில் கிரையம் செய்து தருமாறும் மிரட்டியுள்ளார்.
இதனால், வீரக்தியுடைந்த ஆபிதா பேகம் தனது மாற்றுத்திறனாளி மகன்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். தங்களது வீட்டை விற்கத் தடையாக உள்ள வளர்ப்பு மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுக்காதபட்சத்தில் மகன்கள் இருவருடனும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.