ETV Bharat / state

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த கணவர்: தேடுதல் வேட்டையில் தனிப்படையினர்!

சேலம்: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபரை இரண்டு தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் பரபரப்பு
author img

By

Published : Nov 11, 2019, 11:12 PM IST

சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேகனஸ்வரி(21). இவர், மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கோபியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் சிம்பு என்ற மகனும் உள்ளார். கோபி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மேகனஸ்வரியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தனது மகன் சிம்புவை அழைத்துக்கொண்டு சேலத்தில் வசிக்கும் தந்தை வீட்டிற்கு மேகனஸ்வரி சென்றுவிட்டார். பின்னர் அவரை பல முறை சந்தித்து குடும்பம் நடத்தவருமாறு கோபி அழைத்தும், வரமுடியாது என மேகனஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சேலத்திற்கு வந்த கோபி, துணிக்கடையில் பணிபுரிந்துவிட்டு வீட்டிற்கு வந்த மேகனஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகையில், கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மேகனஸ்வரியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்து மேகனஸ்வரி உயிரிழந்தார்.

மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவர்

பின்னர் அதிகாலையில், மேகனஸ்வரியின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் மேகனஸ்வரி தந்தைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பின், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மேகனஸ்வரியின் உடலை உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த சனிக்கிழமை கோபி கோவையில் சம்பளம் வாங்கிக்கொண்டு, சேலத்திலுள்ள தனது மனைவியை அழைத்து வருவதாகத் தனது நண்பர்களிடம் தெரிவித்துவிட்டுக் கிளம்பியுள்ளார் என்றும், சேலம் வந்த கோபி மது அருந்திவிட்டு இரவு மோகனஸ்வரியை சந்தித்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது கோபியைப் பிடிப்பதற்காக காவல் துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்: விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு!

Intro:சேலத்தில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Body:சேலம் மாநகராட்சி பணமா பேட்டை அருகில் உள்ளது அல்லிக்குட்டை இங்கு உள்ள கங்கா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகனஸ்வரி.

21 வயதான மோகஸ்வரிக்கு, சேலம் மன்னார் பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபிக்கும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சிபு என்ற 3 வயது சிறுவன் உள்ளான். கோபிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு தினமும் இரவு குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 2 மாதத்தில் முன்பு மோகனேஸ்வரி தனது மகன் சிம்புவை அழைத்துக்கொண்டு சேலத்தில் வசிக்கும் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் மோகனேஸ்வரி சேலம் ராஜகணபதி கோவில் அருகில் உள்ள ஏ. ஆர். ஆர் .எஸ் என்ற துணிக்கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

பலமுறை கோபி சேலம் வந்து மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வலியுறுத்தினார். ஆனால் மோகனேஸ்வரி குடும்பம் நடத்த செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு கோபி சேலம் வந்தார். இரவு 9 மணி அளவில் மோகனேஸ்வரி துணிக்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் மெயின் ரோட்டில் இருந்து அவர் வீட்டிற்கு நடந்து வந்தார் அப்போது புதர் ஒன்றில் பதுங்கி இருந்த கோபி மோகனேஸ்வரியாரிடம் தகராறு செய்தார். பின்னர் வாக்குவாதம் முற்றி மோகனேஸ்வரியை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த
மோகனேஸ்வரி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோபி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இன்று அதிகாலை மோகனேஸ்வரியின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் இதுகுறித்து மோகனஸ்வரியின் தந்தை ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். பிறகு இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதன் பேரில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சம்பவம் இடம் வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் துப்பு துலக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் 2 தனிப்படை அமைத்து உள்ளார்.

இவர்கள் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை கோபி கோயமுத்தூரில் சம்பளம் வாங்கிக்கொண்டு சேலத்தில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதாக தனது நண்பர்களிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார். பின்னர் அவர் நேற்று சேலம் வந்து மது குடித்து விட்டு இரவு
மோகனேஸ்வரிக்காக காத்திருந்தார்.

அப்போது மோகன் ஈஸ்வரி வந்ததும் அவரிடம் தகராறு செய்து பிறர் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கோபியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தனிப்படை போலீசார் கோவை சென்று கோபியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்தக் கொலை சம்பவம் சேலம் வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.