ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!

சேலம்: மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகளை சேலம் மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

The Commissioner of Salem Corporation presented relief items and new clothes to all the cleaners in the Corporation

author img

By

Published : Apr 11, 2020, 10:17 AM IST

கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதில், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. இவர்களின் சேவையை பாராட்டும்வகையில் மாநில அரசு இவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறது.

மேலும் கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன . அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர பகுதியில் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருள்களையும், புதிய ஆடைகளையிம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள்

அப்போது பேசிய அவர், இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தங்களது பணி இருக்கவேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.