ETV Bharat / state

பெரியார் பல்கலை.தேர்வில் 'சாதி' குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சை கேள்வி - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! - வரலாற்று முதுகலை பட்டப்படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில்

பெரியார் பல்கலைக்கழகத்தேர்வில் சாதி குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பாஜகவினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் எவை என கேள்வி- பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 18, 2022, 9:06 PM IST

கோவை: சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14ஆம் தேதி வரலாற்று முதுகலை பட்டப்படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில் "தமிழ்நாட்டிற்குரிய தாழ்ந்த சாதி எது" என வினா கேட்கப்பட்டு "மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன்" என்ற நான்கு சாதிகளின் பெயர்கள் விருப்பப் பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பாஜக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் அந்த வினாவை கண்டித்தும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விவேக், 'சமூக நீதி எனப் பேசி வரும் திமுக அரசு இதுபோன்ற சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அப்பல்கலைக்கழகம் மீதும் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பெரியார் பல்கலை.தேர்வில் 'சாதி' குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சை கேள்வி - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

இதையும் படிங்க:டெல்லியில் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூடு - சகப்பணியாளர்கள் 2 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.