ETV Bharat / state

’ரஜினியின் பங்களிப்பு இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறாது’

சேலம்: 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ரஜினியின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறாது என்று சேலம் ரஜினிகாந்த் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி
ரஜினி
author img

By

Published : Jan 3, 2021, 6:09 PM IST

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிச31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தாம் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று மூன்று பக்க அறிக்கையை டிச.29ஆம் தேதி வெளியிட்டு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

என்னை மன்னியுங்கள் - ரஜினி
என்னை மன்னியுங்கள் - ரஜினி

தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதில், கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்' என கூறியிருந்தார். ரஜினியின் இந்த திடீர் முடிவால் அவரது சில ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். மேலும் சிலர் அவரது வீட்டின் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, ரஜினியின் வீடு முன்பு அவரது ரசிகர் ஒருவர் ஜன ஒன்றாம் தேதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறாது

ரஜினி ரசிகர்களின் அறவழி அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சேலம் ரஜினிகாந்த் ரசிகர்கள் அறவழி அரசியல் அழைப்பு போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

வா தலைவா வா...

ரஜினியின் பங்களிப்பு இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறாது

போராட்டத்தின்போது,'வா தலைவா வா... தமிழக மக்களை பாதுகாக்க அரசியலுக்கு வா..' என்று அழைப்பு விடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ரசிகர் சேலம் குகை ஐயப்பன் கூறுகையில்," எங்களது வாழ்க்கையையே ரஜினிகாந்திற்கு அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறோம். அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ரஜினியின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறாது. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்" என்று தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி

முன்னதாக, அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தது.

ரஜினியுடன் அர்ஜுன மூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுன மூர்த்தி

மேலும், தமிழ்நாடு மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி இருப்பதாகவும் ரஜினியுடன் தொடர்ந்து பயணிக்கவே தாம் விரும்புவதாகவும் அர்ஜுன மூர்த்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்களா? ட்விட்டரில் பொங்கும் நெட்டிசன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.