நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் கருப்பூர் பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 200 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், முகக்கவசம் உள்ளிட்ட கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், கணேசன், வையாபுரி, அய்யனார், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரண பொருள்களை தூய்மைப் பணியாளர்கள் வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் மரியாதை