இந்த தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படமும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
’அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’. தமன்னா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இதில், யோகி பாபு, முனிஸ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், டாப்சி நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ எனும் தெலுகு படத்தின் ரீமேக்காகும். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும்.