சேலம் மாவட்டம் அருகே உள்ள மேட்டூரில் படித்த இளம் பெண்களுக்கு தையல் பயிற்சி, சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக தனியார் தொண்டு நிறுவனமான சாரதா அறக்கட்டளையும், மத்திய ஃபுட் அண்ட் ட்ரெயினிங் நிறுவனமும் இணைந்து சுமார் 35 படித்த இளம் பெண்களுக்கு தையல் பயிற்சி, சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் மூலமாக 38 நாட்களுக்கு இலவச தையல் பயிற்சி கற்றுக் கொடுத்து லெதர், துணி உள்ளிட்டவை மூலமாக பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முயற்சியில் இத்தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்தை மத்திய அரசு வழங்கும் நிதி மூலமாக இத்தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் இளம்பெண்களுக்கு பயிற்சியின் நிறைவாக மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த முகாமை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறது. அதே போல், மத்திய அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் பெண்கள் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்! பெண்களின் விழிப்புணர்வு பேரணி!