கடந்த சில நாட்களாகவே சேலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று (ஏப்.19) இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சேலம் மாநகரத்தில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையினால் பிரதான சாலைகளில் மழைநீர் வடிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பாதுகாப்புக் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் சேலம் மாநகரப் பகுதிகளில் நிலவிவந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.