ETV Bharat / state

'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள் - தை பொங்கலுக்காக காத்திருக்கும் விவசாயிகள்

சேலம்: எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் பொங்கல் அறுவடைக்கு கரும்பு விளைச்சல் தயாராக இருந்தும் வியாபாரிகள் யாரும் வாங்க வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

karumpu
karumpu
author img

By

Published : Jan 2, 2020, 10:29 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை பொங்கலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் கரும்பு வியாபாரிகள், இன்கு வந்து மொத்தமாக வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் வியாபாரிகள் யாரும் கரும்பு வாங்க வரவில்லை எனக் கூறப்படுகிறது.

கரும்பு விவசாயிகள் வேதனை

தை பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், கூட்டுறவு மூலம் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு கரும்பு கொடுக்க வேண்டும் என்று நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பூலாம்பட்டி விவசாயிகள் கூறுகையில், "தொழிலாளர் கூலி போக எங்களுக்கு லாபம் குறைவாகத் தான் ஈட்ட முடியும். பொங்கல் நெருங்கிவரும் வேளையில் கரும்பு வியாபாரிகள் யாரும் கரும்பு வாங்க வராமல் இருப்பது கவலையளிக்கிறது" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.இன்னும் சில நாள்கள் பார்த்துவிட்டு கரும்புகளை அறுவடை செய்து உள்ளூர் சந்தைக்கு அனுப்பிவைக்கப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

Intro:சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் பொங்கல் அறுவடைக்கு கரும்பு விளைச்சல் தயாராக இருந்தும் வியாபாரிகள் யாரும் வாங்க வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.Body:

எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தை பொங்கலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் கரும்பு வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் இந்த வருடம் வியாபாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை . அதேபோல தை பொங்கலுக்கு தமிழக அரசு, குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது வழக்கம் .

இந்த வருடமும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த உள்ள நிலையில்
கூட்டுறவு சொசைட்டி மூலம் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொடுக்க கரும்பு வேண்டும் என்று நேரில் வந்து பார்த்து விட்டு சென்றனர் .

ஆனால் இது வரையும் வாங்க வில்லை என்று வேதனை தெரிவித்தனர் .

இது தொடர்பாக
எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில்," தொழிலாளர் கூலி போக எங்களுக்கு லாபம் குறைவாகத்தான் தான் லாபம் ஈட்ட முடியும் .

இந்த நிலையில் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் கரும்பு வியாபாரிகள் யாரும் கரும்பு வாங்க வராமல் இருப்பது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.Conclusion:இன்னும் ஒரு சில நாட்கள் பார்த்துவிட்டு கரும்புகளை அறுவடை செய்து உள்ளூர் சந்தைக்கு அனுப்பிவிடுவோம் . எனவும் விவசாயிகள் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.