ஜான்சன் நகர் பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் 2018ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இதுவரை அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. பள்ளியில் மடிக்கணினி இருப்பு இருந்தும் பழைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்ததாக குற்றம்சாட்டிய 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முன்பாக திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பள்ளி முன்பு உள்ள சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் நேரில் வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் கலைந்துசென்றனர்.