ETV Bharat / state

சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தை அதிர செய்த மாணவர்களின் போராட்டம்

author img

By

Published : Mar 15, 2019, 5:15 PM IST

சேலம்: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாணவர்களின் போராட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வேண்டும். துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

students protest
மாணவர்களின் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், அமைச்சர்களை கண்டித்தும் மாணவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாணவர்கள் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Intro:பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

Body:பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அவர்களைக் கொடுமைப் படுத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களை தூக்கிலிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வழிகாட்டி சபாநாயகர் ஜெயராமனின் மகனை உடனட அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வலியுறுத்தி சபாநாயகர் ஜெயராமனின் மகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் தமிழக அமைச்சர்களை கண்டித்தும் மாணவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாணவர்கள் போராட்டம் காலவரையற்ற போராட்டம் தொடரும் என மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

Conclusion:மேலும் மாணவர் போராட்டத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.