ETV Bharat / state

நீட் தேர்வு தோல்வி எதிரொலி - எடப்பாடி அருகே மாணவர் தற்கொலை! - நீட் தேர்வு தோல்வி

சேலம்: மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாணவர் தற்கொலை
author img

By

Published : Jun 15, 2019, 11:48 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெல்லாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த மாணவன் பாரதபிரியன் என்பவர் 12ஆம் வகுப்பில் 425 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மருத்துவப் படிப்பு பயில்வதற்காக நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் போதிய மதிப்பெண் எடுக்காததால் மருத்துவப் படிப்பில் அவர் சேர முடியவில்லை. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட மாணவர் பாரதபிரியன், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியில் சென்ற மாணவரின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதபிரியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவனின் இறப்பு குறித்து வெளியில் சொல்லாமல் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், தகவலறிந்த எடப்பாடி காவல் துறையினர் பாரதபிரியனின் வீட்டிற்கு சென்று மாணவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:சேலம் அருகே மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெல்லாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் மாணவன் பாரதப்பிரியன் .

இவர் 12ம் வகுப்பில் 425 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மருத்துவ படிப்பு பயில்வதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார் . அதில் 116 மதிப்பெண்கள் பாரதப் பிரியன் எடுத்திருக்கிறார் . ஆனால் அந்த மதிப்பெண்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர போதுமானதாக இல்லை.

இதனால் கடந்த சில நாட்களாகவே பாரதப்பிரியன் வீட்டில் யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார் .

தனது பாடப்புத்தகங்கள் நோட்டுகளில் தனது பெயருக்குப் பின்னால் எம்பிபிஎஸ் என்று எழுதி வைத்து மருத்துவர் தனது லட்சியமாகவே நினைத்து, வந்துள்ளார்.

நீட் எழுதியும் போதிய மதிப்பெண் பெற இயலாது, மருத்துவம் படிக்க இயலாமல் போன சூழல், அவருக்கு மிகுந்த மன வேதனை அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த பாரதப்பிரியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் . ஆனால் இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவிக்காமல் பாரத பிரியனின் சடலத்தை அவரின் குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர் .

இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் பாரத பிரியனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் எடப்பாடி அருகே நடந்த இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.