தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. 10 பிரிவுகளின் நடைபெற்ற இந்த போட்டியில் 12 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.
விவசாயியாக மாறிய முதலமைச்சர் பழனிசாமி: அகமகிழந்து பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர்!
இந்த டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள 18 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். டென்னிஸ் போட்டியை காணவந்த மக்கள், சக மாணவர்கள் வீரர், வீராங்கனைகளை கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும், போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.