சேலம் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு ஜூனியர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் சேலம் மாவட்டத்திலிருந்து மட்டும் 20-க்கு மேற்பட்ட ஆண், பெண் அணியினர் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் சேலம் அணியைச் சேர்ந்தவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கம் என 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று குவித்திருந்தனர்.
மாநில அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இன்று சேலம் மாவட்ட அமெச்சூர் சஙக்த்தின் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கவர்ச்சி ஏஞ்சல் ’பாயல் ராஜ்புட்டின்’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்!