ETV Bharat / state

வரும்முன் காப்போம் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - salem stalin visit

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வரும் முன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Sep 29, 2021, 7:08 AM IST

சேலம் : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(செப்.29) சேலம் செல்கிறார். முதலில் வாழப்பாடி செல்லும் அவர் வரும் முன்காப்போம் மருத்துவ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து ஆத்தூர் செல்லும் அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்து, இதர கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், நவீனப்படுத்தப்பட்ட தனியார் ஜவ்வரசி ஆலைப் பிரிவைப் பார்வையிடும் அவர் ஜவ்வரசிக்கான சில்லறை ஏலப் பிரிவினைத் தொடங்கி வைத்து ஜவ்வரசி ஆலை அதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

ஆய்வு

மாலை சேலம் கரூப்பூரில் உள்ள சிட்கோவில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.மேலும் அங்குள்ள விசைத்தறி கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுகிறார்.

தர்மபுரியில் ஸ்டாலின்

பின்னர் வியாழக்கிழமை(செப்.30) தர்மபுரி செல்லும் முதலமைச்சர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு கட்டடங்களையும்,புதிய மருத்துவ பிரிவுகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க : 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - அனுமதியளித்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.