ETV Bharat / state

வேப்ப மரத்தை பாதுகாக்கும் குழந்தைகள்

author img

By

Published : Nov 29, 2020, 8:39 AM IST

Updated : Nov 30, 2020, 2:27 PM IST

வேப்ப மரங்களை பாதுகாக்கும் வகையில், சேலத்தைச் சேர்ந்த குழந்தைகள் புதிய முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வேப்பமரங்களை பாதுகாக்கும் பணியில் குழந்தைகள்

சேலம் : மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது பழமொழி. அப்படி மரம் எனக்கூறியவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது வேப்பமரம்தான். சேலத்தில் சாலையோரங்கள், குடியிருப்புப் பகுதிகள் என அதிக அளவில் வேப்ப மரங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை பட்டுப்போய் காய்ந்து காணப்படுகின்றன. எனவே அதனை பாதுகாக்கும் வகையில் 'நம்மை பாதுகாக்கும் வேப்ப மரங்களை நாம் பாதுகாப்போம்' என்ற முழக்கத்தோடு , சேலத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வேப்ப மரங்களுக்கு மலர் தூவி நன்றி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் இந்த செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டின் அனைத்து வகை நிலப்பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் இந்த வேப்ப மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடுகளாய்க் காட்சியளிக்கின்றன.

இதுதொடர்பாக கள ஆய்வு நடத்தி வேப்ப மரங்களுக்கு என்ன ஆச்சு என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சேலம் பகுதியைச் சேர்ந்த ' நிலம் 5 பவுண்டேஷன்' என்ற தனியார் அமைப்பின் நிறுவனர் பொன். சண்முகவேலு கூறுகையில் ," தமிழ் நிலத்தின் உலக அடையாளமாக திகழ்வது வேம்பு. தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் வேப்பமரங்கள் தற்போது ஆங்காங்கே எலும்புக்கூடுகளை போல காய்ந்து கருகிப்போய் நிற்கின்றன.

நெஞ்சை கனக்க வைக்கும் இந்தக் காட்சி நமக்கு ஏதோ ஒரு நோய் தாக்குதல் என்பதை உணர்த்துகிறது. இதுகுறித்து தாவரவியல் வல்லுநர்கள் உடன் ஆலோசனை செய்தோம். தேயிலைக் கொசு என்ற கொசு வகை அதிக அளவில் பெருகி வேப்ப மரங்களில் வசிப்பதால் இலைகள் பாதிப்புக்கு உள்ளாகி, அவை காய்ந்து போவதாகவும், மிக விரைவிலேயே இலையுதிர்காலம் வந்ததைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

பல்வேறு நோய்களுக்கு வேம்பின் கசப்பு சுவை தற்போது வரை மருந்தாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வேப்ப மரங்களுக்கே இந்த நிலையா என்ற எண்ணம் எழுகிறது. எனவே நாங்கள் வேப்ப மரங்களை பாதுகாக்க முடிவெடுத்து அந்த மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் குழந்தைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றும் தெரிவித்தார்.

வேப்ப மரங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திரைப்படக் குழந்தை நட்சத்திரம் கவின் பூபதி கூறுகையில்," மஞ்சளும், வேம்பும் நமக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி வருகின்றன. வேப்ப மரங்கள் பல வகையில் நமக்கு பயன்படுகின்றன. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வேப்ப மரங்கள் காய்ந்து போய் நிற்கின்றது.

எனவே நம்மை பாதுகாக்கும் வேப்ப மரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். வேப்ப மரங்கள் காய்ந்து போவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக இன்று வேப்ப மரங்களுக்கு மலர்தூவி குழந்தைள் சார்பில் நன்றி செலுத்தினோம். இதேபோல் பல்வேறு இடங்களுக்கு சென்று நன்றி செலுத்தி வேப்ப மரங்களை பாதுகாக்க வலியுறுத்துவோம் " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேதகு 66 : தமிழினத்தின் தாயுமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

Last Updated : Nov 30, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.